• Sa. Okt 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஈரானுக்கு பொருளாதார தடை ! அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

Apr 17, 2024

இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்த நிலையில், ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் எனவும் கூறியிருந்தது. இருப்பினும் இதனை மீறி ஈரான் தாக்குதலை நடத்தியிருந்தது.

இந்நிலையில் தங்களது எச்சரிக்கையை மீறியதற்காக ஈரான் மீது பொருளாதார தடையை அமெரிக்கா அறிவித்திருக்கிறது.

இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில்,

„எதிர்வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராக கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியாகும்“ என்று கூறியுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed