• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பாடசாலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை

Apr 19, 2024

யாழ்.மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம்

யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி அபிவிருத்தி சட்டவிதி முறைகளை கருத்தில் கொள்ளாமலும் செல்வதால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக வருகை தரும் போதும், பின்னர் வீடு செல்லும் போதும் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

துயர்பகிர்தல் இராஜதுரை பொன்னம்பலம் (18.04.2024,சுவிஸ்)

இதன் காரணமாகவே பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed