அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸில் (Texas) வெள்ள அபாயம் நீடித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருச்செந்தூர் கடலில் சீற்றம். பக்தர்கள் குளிக்க தடை.
இதேவேளை டெக்சாஸில் உள்ள அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டனில் வெள்ளத்தில் சிக்கிய 600க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவித்தல்!
குறித்த பகுதியில் கனமழை நீடிக்கும் என கணிக்கப்படுவதால் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளதுடன் இன்று (05) அடுத்த கனமழைக்கான (அமெரிக்க நேரப்படி) வாய்ப்பு ஏற்படும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஹூஸ்டனுக்கு வடகிழக்கில் உள்ள ஸ்பெளன்டோராவில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகின்றதால் அந்தப் பகுதியில் 180க்கும் அதிகமான மக்கள் மற்றும் 122 செல்லப் பிராணிகள் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
யாழில் மாதா சிலையில் வடியும் கண்ணீர்
ஹூஸ்டன் மெட்ரோ பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் இந்த மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ஈஸ்ட் போர்க் சான் ஜாஸிண்டோ பகுதியில் மின் கம்பங்கள் வரை வெள்ளநீர் செல்வதாக ஹூஸ்டன் குரோனிக்கிள் தெரிவித்துள்ளது.
சான் ஜாஸிண்டோ ஆற்றுப் பகுதியின் கரையோரம் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நான்கு மாதங்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் பெய்துள்ளதாக நேற்று ஹூஸ்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.
- சென்னை மெரினாவில் இன்று இடம்பெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சி.
- காசாவில் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல்: 18 பேர் உயிரிழப்பு
- ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் எதிர்கொள்ளவிருக்கும் புதிய விதிகள்
- இன்று முதல் நாட்டில் கனமழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
- சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்.