• Fr. Okt 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட தாய்: மாயமான மகன்.

Mai 5, 2024

யாழ்ப்பாணம்(Jaffna) தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் பெண்ணின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துள்ள வெளிநாட்டு முதலீடுகள்

அதேவேளை உயிரிழந்த பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதுடன் வீட்டின் சுவர்களில் இரத்தக் கறைகளும் காணப்படுவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

வெப்ப நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உயிரிழந்த பெண் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்ததாகவும் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக வெப்பத்தால் 9 பேர் உயிரிழப்பு!

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் மகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(3) அருகிலுள்ள வீட்டில் தூங்கச் சென்றவேளை வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர்.

அயல் வீட்டில் தூங்கச் சென்ற மகள் மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ள நிலையில் தனது சகோதரன் வீட்டில் இல்லாததையும் அறிந்துள்ளார்.

அது தொடர்பில் அயல் வீட்டாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அயல் வீட்டார் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

பிரேசிலில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 29 பேர் பலி

பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்ற காவலல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் காணாமல்போன சிறுவனை தேடும் நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed