அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றையதினம் (08.05) குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நோர்வேயில் மர்மமான முறையில் உயிரிழந்த புலம்பெயர் தமிழர்
இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று மதியம் 1.45 மணியளவில் மதுபோதையில் இருந்ததை அவரது மகள் அவதானித்துள்ளார்.
பின்னர் 3.30 மணியளவில் அவர் வெயிலில், கீழே விழுந்து இருந்ததை அவதானித்துள்ளார்.
பிறந்தநாள் வாழ்த்து. தவேந்திரன் பிரபாகரன் (09.05.2024)
அருகில் சென்று பார்த்தவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டார். அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அவர் அதிக வெப்பம் காரணமாக உடலில் பத்துக்கு மேற்பட்ட எரிகாயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.
- யாழ் – நீர்வேலி பகுதியில் தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர்
- இன்றைய இராசிபலன்கள் (09.07.2025)
- யாழ். நகர பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆணின் சடலம் மீட்பு
- காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!
- சீனா-நேபாள எல்லையில் நிலச்சரிவு: 17 பேர் மாயம்- மீட்பு பணிகள் தீவிரம் !