• Mi. Nov 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உயர்வடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி!

Mai 13, 2024

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(13.05.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சி அடைந்துள்ளதுடன் டொலரின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

வெளிநாட்டில் இருந்து வங்கிக்கு அனுப்பிய பணம் மாயம்!

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (13.05.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.78 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை  223.12 ரூபாவாகவும், கொள்வனவு விலை 213.71 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

  1. காசாவில் கட்டிடங்களின் இடிபாடுகளின் இடையே 10000 உடல்கள்
  2. கரட் துண்டால் பறிபோன குழந்தையின் உயிர்

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 328.63 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 315.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  381.79 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  366.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed