யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் மரத்திலிருந்து தவறிவிழுந்த இளைஞன் ஒருவர் வெள்ளிக்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த சசிக்குமார் ரூபின்சன் என்ற 20 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞன் கடந்த 12ஆம் திகதி மாங்கனிகளை பறிப்பதற்காக மாமரமொன்றில் ஏறிய நிலையில் தவறிவிழுந்ததில் சுயநினைவை இழந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
யாழில் கொத்து றொட்டியில் உரோமம்?ஹோட்டலுக்கு சீல்.
இந் நிலையிலேயே நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மரண விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- திருமணநாள் வாழ்த்து . பரசுராமன் கலைவாணி தம்பதிகள் (15.09.2024,கனடா)
- திருமணம் முடித்து 6 மாதங்கள்!! மலேசியாவில் இளைஞர் விபரீத முடிவு
- தேர்தலை முன்னிட்டு மூடப்படும் மதுபான சாலைகள்!
- பிரித்தானியாவில் கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான அறிவிப்பு !
- யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி.