• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த உற்சவம்.

Mai 22, 2024

 ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடந்து தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருவதுடன் நேற்றையதினம் (21) காலை திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.

 அளவெட்டி மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி ,வெளி வீதி உலா வந்தனர்.

அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் தேரில் ஆரோகணித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க பஞ்சரத பவனி இடம் பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த உற்சவம் | Tirkhedeeswara Temple Tirtha Utsavam Mannar
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த உற்சவம் | Tirkhedeeswara Temple Tirtha Utsavam Mannar

தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு,தேரில் பச்சை சாத்தப்பட்டதைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் ஆலயத்தில் எழுந்தருளினார்கள்.

இந்நிலையில் இன்றைய தினம் தீர்த்த உற்சவம் இடம்பெறும் நிலையில் பெரும்திரளான  மக்கள் கலந்துகொண்டு திருவிழாவினை சிறப்பித்துள்ளனர்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed