கனடாவில் சில குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூறிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் மொன்டோரியலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் 15 வயது இளைஞர் ஒருவரும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மலேசியாவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட 1,608 இலங்கையர்கள்…
செயிண்ட்-ஆண்ட்ரே மற்றும் மென்டோனா வீதியில் சுமார் 15 பேர் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
தகவலறிந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததையடுத்து சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
4 ஆம் ஆண்டு நினைவுநாள். அற்புதநாயகி செல்வராசா. சிறுப்பிட்டி மேற்கு 24.05.2024
எவ்வாறாயினும் இந்த சம்பவம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதல்ல என அந்நாட்டு பொலிஸார் உறதிபடுத்தியுள்ளனர்.
கடந்த 10 நாட்களில் மாத்திரம் மொன்டோரியலில் ஏழு கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக புலம்பெயர் தமிழ் அகதிகள் மத்தியில் அச்சநிலை காணப்படுவதாக கனடா வாழ் அகதிகள் குறிப்பிடுகின்றனர்.
- யாழ்ப்பாணத்தில் 3 நாட்கள் காய்ச்சல்!குடும்பஸ்தர் உயிரிழப்பு!
- யாழில் 3 பிள்ளைகளின் தாய் கிணற்றில் சடலமாக மீட்பு
- மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன் உயிரிழப்பு!
- இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சனியின் அருள் கிடைக்க எளிய பரிகாரம்