யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
24 ஆம் திகதி போயா தினமான இன்று மதுபானசாலைகள் மூடப்பட்ட நிலையில் கசிப்பு வியாபாரத்தில் பெண் ஒருவர் ஈடுபடுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சனி நட்சத்திர பெயர்ச்சி ; இந்த ராசிக்காரர்களின் முடிவுக்கு வரப்போகும் கஷ்டங்கள்
- பிறந்தநாள் வாழ்த்து நிதர்சினி நிசாந்தன் (சோபிதா) 14.08.2026
- பிறந்தநாள் வாழ்த்து: செல்வி தேவிதா தேவராசா(14.08.2026)
- இலங்கையில் வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு
- கஞ்சாவுடன் 16 வயது பாடசாலை மாணவன் கைது
