கொழும்பு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தரம் உயர்த்தப்படும் யாழ் போதனா வைத்தியசாலை!
நேற்று (24) இரவு 7 மணி அளவில் அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு வெளிவட்ட வீதியின் 1.2 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து குறித்த இளைஞன் வீழ்ந்துள்ளார்.
அப்போது, மாத்தறை நோக்கிச் சென்ற காரில் இளைஞன் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பாதுக்க பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலைக்களமாக மாறும் கனடா-மூவர் பலி-புலம்பெயர் தமிழ் அகதிகள் அச்சத்தில்.
இந்த விபத்தில் கார் சேதமடைந்துள்ளதுடன், கார் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் நடத்திய சோதனையில் உயிரிழந்த இளைஞரின் வீட்டில் தற்கொலை செய்து கொள்வதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- யாழ்ப்பாணத்தில் 3 நாட்கள் காய்ச்சல்!குடும்பஸ்தர் உயிரிழப்பு!
- யாழில் 3 பிள்ளைகளின் தாய் கிணற்றில் சடலமாக மீட்பு
- மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன் உயிரிழப்பு!
- இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சனியின் அருள் கிடைக்க எளிய பரிகாரம்