சிறிலங்கா பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு தொடர்ச்சியாக வழங்குமாறு அதிவிசேட வர்த்தமானி இன்று (25) வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இவ் வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இறைவரி திணைக்களம்
அரச நிறுவனங்கள் உட்பட சிறிலங்கா பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகலுக்கு அமைய ஏப்ரல் 1 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு நபரோ அல்லது அரச நிறுவனமோ எந்தவொரு தகவலையும் பராமரிக்கவில்லை என்றால், அந்த தகவலை இந்த ஆண்டு ஜூலை 1 முதல் பராமரிக்கத் தொடங்க வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- யாழில் வீசிய பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்ட கூரைகள்
- AI தொழிலாளர்களுக்கான விசா விதிகளை தளர்த்த பிரித்தானியா திட்டம்
- இன்றைய இராசிபலன்கள் (19.01.2025)
- திருமணநாள் வாழ்த்து.கஜன் அனுஷிகா (19.01.2025, சிறுப்பிட்டி)
- திருமணநாள் வாழ்த்து. பிரபா ,சுகி தம்பதிகள். (19.01.2025, சிறுப்பிட்டி மேற்கு)