• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

30 ஆண்டு ஆகியும் கெட்டு போகாத பர்கர்.

Mai 28, 2024

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாஸ்ட்புட் நிறுவனமான மெக்டொனால்டின் பர்கரை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இவை பொதுவாகவே சில நாட்கள் வரை கெட்டு போகாது. அதன் சுவையும் மிகவும் ருசியாக இருக்கும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாக கெட்டு போகாமல் இருப்பதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேசிடீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் கடந்த 1995-ம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் சீஸ்டுன் கூடிய பர்கரை வாங்கி உள்ளனர். அப்போது பில்கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்துள்ளார்.

6 ஆம் ஆண்டு நினைவு. தம்பு நடேசு.(28.05.2024, சிறுப்பிட்டி மேற்கு)

அதன்பிறகு ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோர் தலா 2 முறை, டிரம்ப், இப்போது ஜோ பைடன் ஒரு முறை என பல அதிபர்கள் வந்து விட்ட நிலையிலும், இந்த பர்கர் மட்டும் எதுவுமே ஆகவில்லை. இதுகுறித்து பர்கரை வாங்கிய இளைஞர்கள் கூறுகையில், நாங்கள் நிறைய உணவுகளை ஆர்டர் செய்து விட்டோம்.

அது அளவுக்கு அதிகமாக போய் விட்டது. இதனால் அந்த பர்கரை என்ன செய்யலாம் என ஆலோசித்தோம். அப்படி பேசும் போது அந்த பர்கரை அப்படியே வைத்தால் என்ன நடக்கும் என்று யோசித்தோம். அதைத்தான் செய்தோம் என்றனர்.

  1. மத்திய வங்கியின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பு!
  2. யாழ் ஆவரங்கால் சிவன் ஆலயத்தில்  திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

சுமார் 30 ஆண்டுகள் ஆகி இருக்கும் நிலையில் அந்த பர்கரில் நுண்ணுயிர் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படவில்லை. கெட்டுப்போன வாசம் கூட அதில் இருந்து வரவில்லை என கூறினர். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed