• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தாய்லாந்துக்கு விசா இன்றி இலங்கை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி!

Mai 30, 2024

ஜூன் முதலாம் திகதி முதல் இங்கையர்கள் விசா இல்லாமலேயே தாய்லாந்துக்குச் செல்தற்கும், அங்கு 60 நாட்கள் வரை தங்குவதற்கும் அந்நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் இலவச விசா மற்றும் ஒன் அரைவல் விசா திட்டங்கள், மாணவர்கள் நீண்ட காலம் தங்குதல் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு கட்டாய சுகாதார காப்பீடு ஆகியவை அடங்கும்.

  1. மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு
  2. இலங்கை குடியுரிமை பெற்றுக்கொள்ள! வெளியான வர்த்தமானி

அதன்படி, அல்பேனியா, கம்போடியா, சீனா, இந்தியா, ஜமைக்கா, கஜகஸ்தான், லாவோஸ், மெக்சிகோ, மொராக்கோ, பனாமா, ருமேனியா, இலங்கை மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 36 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுடன், இலங்கை சுற்றுலாப் பயணிகளும் விசா இன்றி தாய்லாந்துக்கு செல்ல முடியும்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு.

இந்த விரிவாக்கம் விசா இல்லாத நுழைவுக்கான தகுதியுள்ள நாடுகளின் எண்ணிக்கையை 57 இலிருந்து 93 ஆக அதிகரித்துள்ளது. சுற்றுலாவை பெரிதும் நம்பியிருக்கும் தேசிய பொருளாதாரத்தை அதிகரிக்க இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என தாய்லாந்து அரசாங்க ஊடகவியலாளர் சாய் வச்சரோன்கேயின் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed