யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்காவற்துறை பகுதியில் குளம் ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் நேற்றிரவு உயிரிழந்துள்ளனர்.
யாழில் நீரில் மிதந்த நிலையில் இரு சிறுவர்களின் சடலம் மீட்பு!
இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியுற்று மயக்கமடைந்த தாய் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சீரற்ற காலநிலை – 24 மணியாத்துள் 10 இறப்புகள் 5 காணமல் போதல்
குறித்த விபத்து சம்பவத்தில் ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரஞ்சன் நிதுசா மற்றும் 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா ஆகிய இரு சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பால் வாங்க சென்ற இருவரையும் காணவில்லை என குடும்பத்தினர் தேடிய போது கடைக்கு சற்று தொலைவில் உள்ள குளத்திற்குள் இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளனர்.
சுவிற்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் ரயிலில் மோதுண்டு மரணம்!!
குளத்தின் வரம்பு வழியாக துவிச்சக்கர வண்டியை செலுத்திய வேளை அருகில் இருந்த கல் தடக்கி, துவிச்சக்கர வண்டியுடன் தவறி குளத்துக்குள் விழுந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இரு சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்பட்டு, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி நாகராஜா தியாகராஜா, ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு சிறுமி ஒருவர் கடந்த வருடம் விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது இருவரும் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் நீரில் மிதந்த நிலையில் இரு சிறுவர்களின் சடலம் மீட்பு!
- திருமணநாள் வாழ்த்து . பரசுராமன் கலைவாணி தம்பதிகள் (15.09.2024,கனடா)
- திருமணம் முடித்து 6 மாதங்கள்!! மலேசியாவில் இளைஞர் விபரீத முடிவு
- தேர்தலை முன்னிட்டு மூடப்படும் மதுபான சாலைகள்!
- பிரித்தானியாவில் கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான அறிவிப்பு !
- யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி.