• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு

Jun 3, 2024

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்கள் மற்றும் பிரதேசங்களில் உள்ள அரச பாடசாலைகளுக்கு நாளை (4.6.2024) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் எச்.டி.குஷான் சமீர வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதன்படி இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு – ஹோமாகம வலயம் ஆகிய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று பாடசாலை

ஏனைய மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் வழமை போன்று பாடசாலைகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளைய காலநிலையின் அடிப்படையில் மாகாண அதிகாரிகள் வலய பணிப்பாளர்களுக்கு அறிவித்து பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை எடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஒருநாள் 24 மணி நேரத்திற்கு பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்கலாம்

முதலாம் இணைப்பு

தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சீரற்ற காலநிலை

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு | Announcement School Holiday In Srilanka

சுவிற்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் ரயிலில் மோதுண்டு மரணம்!! –

மேலும் நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கல்வி அமைச்சு நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed