வடக்கு கடல் பரப்பில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாள் வாழ்த்து. திருமதி கு.கனகேஸ்வரி (06.06.2024, சுவிஸ்)
குறித்த கைது நடவடிக்கை நேற்று (05.06.2024) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச்(Jaffna) சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கேரள கஞ்சாவை படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளதுடன் 70 கிலோகிராம் கேரள கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மற்றும் அவர்களது படகும் மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
- மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் வெள்ளம்! 30 பேர் உயிரிழப்பு
- கொழும்பில் உயிரை மாய்த்துக்கொண்ட அவுஸ்திரேலிய பிரஜை .
- வருட இறுதியில் எதிர்பார்க்காத ராஜ அதிர்ஷ்டம் அடிக்கும் 8 ராசிக்காரர்கள்
- யாழில் திடிரென வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல்
- இன்றைய இராசிபலன்கள் (03.12.2024)