• Mo. Nov 4th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தன்னுடைய கடைசிப் படத்தை தானே தயாரிக்கிறாரா விஜய்?

Jun 13, 2024

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தியாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண தமிழன்

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்க இயக்குனர் ஹெச் வினோத்  ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கான செய்தி!

இந்நிலையில் இந்த படம் ஒரு அரசியல் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் தானே இந்த படத்தைத் தயாரிக்க விஜய் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் பொய் என்றும் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed