நேற்றையதினம் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண்ணொருவர் இன்றையதினம் (03) தெல்லிப்பழை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குணசேகரம் வரதசுரோன்மணி என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய விற்பனை நிலவரம்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் நேற்றையதினம் அவரது வீட்டுக்கு அருகேயுள்ள காணிக்குள் சென்று பனையோலை எடுத்தவேளை அதனுள் இருந்த கருங்குளவி அவர்மீது கொட்டியது. இந்நிலையில் அவர் சங்கானை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
தீயில் கருகி தம்பதிகள் உயிரிழப்பு
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- A9 வீதியில் அதிகாலையில் விபத்து ; 14 பேர் காயம்
- பாரிஸில் தீ விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழப்பு!
- யாழ் புத்தூர் சந்திப் பகுதியில் கோர விபத்து அபிவிருத்தி உத்தியோகத்தரான பெண் பலி
- யாழில் இளம்பெண் கொலை! ; தாய்க்கு நேர்ந்த கொடூரம். உயிரை மாய்த்த இளைஞன்
- வவுனியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி
