பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை (04.07.2024) பொதுத் தேர்தல் (britain general election 2024) நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் தொழில் கட்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் பல கருத்துக் கணிப்புகள் வெளியாகியுளள்ன.
தொழில் கட்சி வெற்றிபெற்றால் 14 ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி செய்திவருதுடன், பலமுறை கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடு மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியமை உள்ளிட்ட காரணங்களால் பிரதமர்களும் மாறினர்.
தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் மீது மக்கள் பெரும் எதிர்பார்ப்பை ஆரம்பத்தில் வைத்திருந்த போதிலும் தற்போது அவரது செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது.
இந்த நிலையில், இம்முறை முதல் முறையாக இரண்டு தமிழிர்கள் பிரித்தானிய பொதுத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
தொழிலாளர் கட்சியின் சார்பாக கிருஷ்ணி ரிஷிகரன் (chrishni reshekaron) போட்டியிடுகிறார். உமா குமாரன் (Uma Kumaran) லிபரல் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.
அதேபோன்று ஜாகிர் ஹுசேன் என்ற தமிழ் பேசும் இஸ்லாமியரும் லிபரல் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.
வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானியாவில் தமிழர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இந்தத் தேர்தலை உற்று நோக்கி வருகின்றனர்.
தொழிலாளர் கட்சி சார்பாக போட்டியிடும் கிருஷ்ணி ரிஷிகரன் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பதுடன், பிரித்தானியாவில் கவனிக்கத்தக்க ஒரு பெண்ணாகவும் உள்ளார்.
கிருஷ்ணி ரிஷிகரன் இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அவரது தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று உமா குமாரனுக்கும் வெற்றிவாய்ப்புகள் இருப்பதாக இவரது தொகுதியில் உள்ள தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
- செவ்வாய் கிழமையில் வீட்டை சுத்தம் செய்யலாமா?
- அரிசி விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் .
- இன்றைய இராசிபலன்கள் (10.12.2024)
- 3ஆம் ஆண்டு நினைவு.அமரர் திரு.சின்னப்பு சிவசுப்பிரமணியம் (10.12.2024,சிறுப்பிட்டி மேற்கு)
- யாழ்ப்பாணத்தில் 3 நாட்கள் காய்ச்சல்!குடும்பஸ்தர் உயிரிழப்பு!