சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் எனவும் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவிற்கு ஆதரவு வழங்கியும் நேற்று பொதுமக்களால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா அரச நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக தெரிவித்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, போராட்டக்காரர்கள் ஏ – 9 வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டமையினால் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கொழும்பில் விசேட பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா நிலையிலும், சுகவீன விடுமுறையின் காரணமாகவும் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறினார்.
இதேவேளை, யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிலவி வரும் குழப்பமான நிலையிலேயே தற்போது புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம் இடம்பெற்றுள்ளது.
- கனடாவில் நிவராணம் பெறுவோரின் எண்ணிகையில் உயர்வு!
- தங்கத்தின் விலையில் இறக்கம்.
- இன்றைய இராசிபலன்கள் (11.09.2024)
- 10 ஆம் ஆண்டு நினைவுகள். ஜயாத்துரை குணசேகரம். (சிறுப்பிட்டி மேற்கு 11.09.2024}
- நல்லூரில் தவறவிடப்பட்ட பொருட்கள் அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும்