• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு 1 கோடி வழங்கிய நடிகர் சிரஞ்சீவி

Aug 4, 2024

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையும் ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

யாழில் குழந்தை மரணம் தொடர்பில் தாய் வழங்கிய வாக்குமூலம்!

இது வரைக்கும் 350க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். தற்போதைய நிலவரப்படி, 215 பேரின் சடலங்கள், 143 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல சிரஞ்சீவி தனது எக்ஸ் தலத்தில், „கேரளாவில் கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்புகளால் ஆழ்ந்த துயரத்தை ஆழ்த்தியுள்ளது. நானும் சரணும் இணைந்து 1 கோடி ரூபாய் நிவாரண நிதி கேரளா அரசுக்கு கொடுக்கிறோம்“ என்று தெரிவித்துள்ளார். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed