• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

24 பேர் உயிரோடு எரித்துக் கொலை.. வங்கதேசத்தில் பயங்கரம்.

Aug 7, 2024

வங்கதேசத்தில் கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று உயிருடன் 24 பேர் எரித்து கொலை செய்யப்பட்டதாக வெளியாகி இருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த சில வாரங்களுக்கு முன் இட ஒதுக்கீடு குறித்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் மாணவர்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த மாணவர் போராட்டம் ஒரு கட்டத்தில் கலகக்காரர்களின் வன்முறையாக மாறிய நிலையில் இந்துக்கள் மீதும் இந்து கோயில்கள் மீதும் வன்முறை ஏவப்பட்டது என்பதும் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 

இந்த நிலையில் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி சென்றுவிட்ட நிலையில் அவர் லண்டனில் தஞ்சம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி வங்கதேசத்தின் ஜெஸ்சோர் என்ற நகரில் நட்சத்திர விடுதிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகவும் இந்த தீயில் சிக்கிய 24 பேர் உயிருடன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி இந்த நட்சத்திர ஓட்டலில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தீக்காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed