சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டின் முதல் பாதியில் ஆண்டுக்கு குடிவரவாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனையிறவு சோதனைச் சாவடி அருகில் விபத்து. ஒருவர் பலி
இந்த ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் மொத்தம், 80,684 வெளிநாட்டினர் நிரந்தரமாக குடிபெயர்ந்துள்ளனர் என்று இடம்பெயர்வுக்கான மாநில செயலகம் (SEM)தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியை விட 5.9% அல்லது 6,237 பேர் குறைவாகும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒப்பந்த உறுப்பு நாடுகளில் இருந்தான குடியேற்றம் 7.2% குறைந்து 57,330 பேராக உள்ளது.
இன்று யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றம்.
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது EFTA வைச் சேராத, மூன்றாம் நாட்டுப் பிரஜைகளின் குடியேற்றம் 2.4% குறைந்து, 23,354 ஆக உள்ளது.
குடியேறியவர்களில், குடும்ப மறு ஒருங்கிணைப்பு 24.3% ஐ கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 9.2% குறைவாகும்.
அதேவேளை, ஜூன் மாத இறுதி நிலவரப்படி, மொத்தம் 2,338,710 வெளிநாட்டினர் சுவிசில் வசித்து வருவதாகவும் இடம்பெயர்வுக்கான மாநில செயலகம் (SEM) தெரிவித்துள்ளது.