• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் இலங்கைத் தமிழன் ஒருவர் கைது

Aug 10, 2024

கனடாவில் பெருந்தொகை கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ப்ளூ வோட்டர் பாலத்தில் கிட்டத்தட்ட 120 கிலோகிராமுக்கு அதிகமான கொக்கைனுடன் அவர் கைது செய்யப்பட்டார். அவர் ட்ரக் சாரதியாவார்.

கனடாத் தமிழன் யோகராஜைக் காணவில்லை?

42 வயதுடைய ஜூலி சபேசன் சத்தியசீலன் என்பவரே வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பாலத்தில் அவரது ட்ரக் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்ட போது, கனடாவில் தடைசெய்யப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

கொக்கெய்ன் போதைப்பொருளை விநியோகித்த, உற்பத்தி செய்ததாக சபேசன் சத்தியசீலன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரது பிணைப்பத்திரம் 3 மில்லியன் கனடா டொலராக நிர்ணயிக்கப்பட்டது.

விசாரணை தொடர்வதால் மேலும் பல குற்றச்சாட்டுகள் சேர்க்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed