இந்தியா – ஆந்திர மாநிலத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 17 பேர் பலியாயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், 30 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
விபத்து குறித்து அந்நாட்டு பொலிஸார் கூறுகையில், „காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தில் நிலைமை தற்போது அமைதியாக உள்ளது. நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், குறைந்தளவிலான ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர்“ என கூறியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் கூறியுள்ளார்.
- திருமணநாள் வாழ்த்து . பரசுராமன் கலைவாணி தம்பதிகள் (15.09.2024,கனடா)
- திருமணம் முடித்து 6 மாதங்கள்!! மலேசியாவில் இளைஞர் விபரீத முடிவு
- தேர்தலை முன்னிட்டு மூடப்படும் மதுபான சாலைகள்!
- பிரித்தானியாவில் கல்வியை தொடர விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான அறிவிப்பு !
- யாழில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி.