• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் இன்று

Sep 2, 2024

யாழ்ப்பாணம் வடமராட்சியின் பிரசித்தி பெற்ற வல்லிபுர ஆழ்வார் வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் (2) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று, எதிர்வரும் 15ஆம் திகதி சப்பரத்திருவிழாவும், மறுநாள் 16ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 17ஆம் திகதி சமுத்திர தீர்த்த திருவிழாவும், இடம் பெறவுள்ளன.

மேலும் திருவிழாவுக்கு வருகைதரும் பக்தர்களின் நலன் கருதி, சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேசசபையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பருத்தித்துறை பொலிஸாரும், மேற்கொண்டுள்ளனர்.

ஈழத்தின் பிரசித்தி பெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கொடியேற்றம் இன்று! | Vadamaratsi Vallipura Alvar Kovil Kodiyettam

அத்துடன், போக்குவரத்து வசதிகளை  இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையினரும் , யாழ் . மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கமும் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed