• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Sep 3, 2024

நாளை மறுநாள் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகயுள்ள நிலையில் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸிற்கு செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது!

இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைகிறது.

கடந்த வாரம் மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்து ஆந்திரா அருகே கரையை கடந்தது.

இதனால் ஆந்திரா – தெலுங்கானா மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் அங்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மீண்டுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை வலுவடைகிறது.

இரவு நூடுல்ஸ் சாப்பிட்டு உறங்கிய சிறுமி உயிரிழப்பு !

தமிழகத்திற்கு அதிகளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றாலும் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.


இன்றைய இராசிபலன்கள் (03.09.2024)

மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோர பகுதிகள் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மணிக்கு 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed