• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நைஜீரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 81 பேர் பலி !

Sep 4, 2024

வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரியான புலமா ஜலாலுதீன் தெரிவித்தார். மேலும் இந்த தாக்குதலில் குறைந்தது 81 பேர் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed