• So. Sep 15th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரபல வில்லன் நடிகர் மரணம்!திரையுலக பிரபலங்கள் இரங்கல்

Sep 4, 2024

பிரபல வில்லன் நடிகரும் தயாரிப்பாளருமான , மோகன் நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார். இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக மோகன் நடராஜன் காலமானார். அவருக்கு வயது 71.

தமிழ் சினிமாவில் ஸ்ரீராஜகாளியம்மன் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல்வேறு படங்களை தயாரித்தவர் மோகன் நடராஜன். இவர் தயாரிப்பாளராக மட்டுமன்றி சிட்டிசன், மகாநதி, உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாகவும் நடித்திருந்து ரசிகர்களை கவர்ந்தார்.

 

அதேபோல் ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் பூக்களை பறிக்காதீர்கள், பூ மழை பொழியுது, இனிய உறவு பூத்தது, என் தங்கச்சி படிச்சவ, பிள்ளைக்காக, எங்க அண்ணன் வரட்டும், வேலை கிடைச்சிருச்சு, கிழக்குக்கரை, கோட்டைவாசல், சாமுண்டி, மறவன், பதவி பிரமாணம், கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல் மற்றும் தெய்வத்திருமகள் ஆகிய தமிழ் படங்களை தயாரித்துள்ளார்.

மேலும் கன்னடத்தில் ரவுடி எம்.எல்.ஏ மற்றும் சினேகா ஆகிய படங்களை தயாரித்துள்ளார். விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிகரமாக படங்களை தயாரித்து வெளியிட்டவர் ஆவார்.

இந்நிலையில்,அவருடைய மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மோகன் நடராஜன் மறைவைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குனர் வாசு உள்ளிட்ட பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed