• Mi. Nov 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Sep 23, 2024

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டு காலமாக பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 ஒளிபரப்பு தொடங்கும் திகதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, அக்டோபர் முதல் வாரம் அதாவது 6ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

யாழ் விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிசிச்சை பலனின்றி உயிரிழப்பு

அதுமட்டுமில்லாமல் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்த்து ரசிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.தற்போது வெளியாகி இருக்கும் இந்த தகவலால் பிக் பாஸ் பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 7 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால், ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் இந்த நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்க

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டு காலமாக பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழ் மொழியில் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஏற்கனவே 7 சீசன் கடந்த நிலையில் தற்போது 8 வது சீசனில் ரசிகர்களுக்கு பல ட்விஸ்ட் காத்திருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

கடந்த 7 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். சில கமிட்மெண்ட் காரணமாக இதில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Bigg Boss Broadcast Date Official Announcement

கடந்த சீசனின் தீம் இரண்டு வீடு என ப்ரோமோ வெளியிடப்பட்டது. இம்முறை ஆட்டமும் புதுசு ஆளும் புதுசு என்ற தீம் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் திரை அமைத்து பொதுமக்கள் மத்தியில் ப்ரோமோ வெளியிடப்பட்டது.

அனைத்து விஷயத்தையும் நிதானமாக, வேறு ஒரு கோணத்தில் பார்க்கும் விஜய்சேதுபதி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சரியான தேர்வு என அவரது ரசிகர்கள் அவரை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்த பிக் பாஸ் 8 சீசன் போட்டியாளர்கள் யார் என்ற தகவலும் பரவி வருகிறது.

ரோஷினி ஹரிப்ரியன், விஜே விஷால், அக்ஷிதா அசோக், திவ்யா துரைசாமி, ஷாலின் ஜோயா, சம்யுக்தா விஸ்வநாதன், அமலா ஷாஜி, ஜாக்குலின்,தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், நடிகர் செந்தில், வினோத் பாபு, பவித்ரா ஜனனி உள்ளிட்டோர்களின் பெயர்களும் இதில் அடிப்பட்டு வருகிறது. இதில் யார் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வார்கள் என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளில் தான் தெரியவரும்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed