சுவிஸ் சூரிச் நகரில்( 01) சீன இளைஞன் ஒருவர், பகல் பராமரிப்பு மையத்திற்கு செல்லும் குழந்தைகளை கத்தியால் தாக்கியுள்ளார்.
துயர் பகிர்தல். திரு உதயவர்ணன் கிருஷ்னபிள்ளை (30.09.2024, கனடா)
இந்தச் சம்பவத்தில் 5 வயதுடைய மூன்று குழந்தைகள் காயமடைந்தனர்.
மதியம் 12 மணிக்குப் பின்னர், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Berninastrasse இல் உள்ள பகல் பராமரிப்பு மைய ஊழியர் ஒருவர் குழந்தைகளுடன் பகல் பராமரிப்பு மையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒருவர் குழந்தைகளை கத்தியால் தாக்கினார்.
இன்றைய இராசிபலன்கள் (02.10.2024)
பகல் பராமரிப்பு ஊழியர், மற்றொரு நபரின் உதவியுடன் அந்த நபரை தடுத்துள்ளார்.
குற்றவாளி 23 வயதான சீன இளைஞன் என்றும், காயமடைந்த 5 வயதுடைய மூன்று சிறுவர்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மற்ற இரு சிறுவர்களும், சிறுகாயம் அடைந்துள்ளனர்.
குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்