• Mi. Nov 13th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

Okt 15, 2024

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும்.

பிறந்தநாள் வாழ்த்து. இலங்கோ மதி (15.10.2024, சிறுப்பிட்டி மேற்கு)

அதேபோல், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. மேலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை (புதன்கிழமை) அல்லது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

இன்றைய ராசிபலன்கள் 15.10.2024

இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கனமழை பெய்த நிலையில் இன்று காலை மீண்டும் கனமழை பெய்யத்தொடங்கியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அலுவலகம் செல்வோர், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.​

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed