யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் காரின் இலக்க தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அது போலியானது என தெரிய வந்துள்ளது. அத்துடன் காரில் இருந்த ஆவணங்களும் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.
குற்றச்செயல்களுடன் தொடர்புடைய காராக இருக்காமல் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கார் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- குறைக்கப்படவுள்ள வரிகள்..! மக்களுக்கு அமைச்சரின் அறிவிப்பு
- அக்டோபர் மாத குரு பெயர்ச்சி பலன்கள்:
- நாட்டின் பல பகுதிகளில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை
- யாழ் இணுவில் புகையிரத விபத்து – இரு கால்கள் மற்றும் ஒரு கையை இழந்த குடும்பஸ்தர்!
- இறைச்சி மற்றும் முட்டை விலை அதிகரிப்பு – வெளியான தகவல்
