• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கைக்கான புதிய விமான சேவையை ஆரம்பித்த நாடு !

Okt 31, 2024

போலந்தில் (Poland) இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

யாழ்.உரும்பிராயில் ஹெரோயின் பாவனையால் இளைஞர் உயிழப்பு !

வார்சா – கொழும்பு இடையிலான இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 2025 மார்ச் இறுதி வரை தொடர்ந்து இயங்கும் என என்டர் ஏர் கூறியுள்ளது.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலா இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.

அதன் முதல் விமானமானது நேற்றைய தினம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது.

யாழ் தம்பதி கொலையில் பொலிஸார் பகீர் தகவல்

விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அதற்கு நீர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை சுற்றுலாத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய நடன நிகழ்ச்சி மூலம் அதில் பயணம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed