யாழில் மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
துன்னாலை கிழக்கு, குடத்தனை பகுதியைச் சேர்ந்த 68 வயதான 6 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு கடந்த 3ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது
இந்நிலையில் 4 ஆம் திகதி மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அன்றிரவே மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (05) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
- A9 வீதியில் அதிகாலையில் விபத்து ; 14 பேர் காயம்
- பாரிஸில் தீ விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் உயிரிழப்பு!
- யாழ் புத்தூர் சந்திப் பகுதியில் கோர விபத்து அபிவிருத்தி உத்தியோகத்தரான பெண் பலி
- யாழில் இளம்பெண் கொலை! ; தாய்க்கு நேர்ந்த கொடூரம். உயிரை மாய்த்த இளைஞன்
- வவுனியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி
