போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டுக்கு வருகை தந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் இன்று திங்கட்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் என தெரியவருகின்றது.
சந்தேகநபர் லண்டனிலிருந்து, இன்றைய தினம் காலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கடந்த 2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்று,
பின்னர் அங்கிருந்து போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- யாழ் புத்தூர் சந்திப் பகுதியில் கோர விபத்து அபிவிருத்தி உத்தியோகத்தரான பெண் பலி
- யாழில் இளம்பெண் கொலை! ; தாய்க்கு நேர்ந்த கொடூரம். உயிரை மாய்த்த இளைஞன்
- வவுனியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலி
- யாழில் மோட்டார் சைக்கிள் பெட்டியைத் திறந்து திருட்டு!
- குறைக்கப்படவுள்ள வரிகள்..! மக்களுக்கு அமைச்சரின் அறிவிப்பு
