• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

29 ஜோடிகள் செய்த வினோத திருமணம் நிகழ்வு

Nov 14, 2024

ஆடையில்லாமல் 29 ஜோடிகள் திருமணம் செய்த நிகழ்வு கரீபியன் தீவு பகுதியில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வினோத செய்திகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தான் இந்த வினோத திருமணம் நடந்துள்ளது. கடந்த 2000 ஆண்டு முதல் இந்த பகுதியில் அசாதாரண திருமண நிகழ்வுகளை அனுபவிக்க விரும்புபவர்களுக்காக ஒரு ரிசார்ட் திறக்கப்பட்டது.

 2001 ஆம் ஆண்டு 8 ஜோடிகள் ஆடை இல்லாமல் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன்பின்னர் பல நேரங்களில் இங்கு அவ்வப்போது நிர்வாண திருமணங்கள் நடைபெறுகிறது. சமீபத்தில் 29 ஜோடிகள் இங்கு நிர்வாணமாக திருமணம் செய்துள்ளனர்

வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த ஜோடிகள் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவன்-மனைவிகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான திருமணங்களை ஊக்குவித்து வருவதாக ரிசார்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிர்வாண திருமணத்தில் ஈடுபட விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்றும், இது மணமக்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இதனை ஒரு கலாச்சார சீரழிவு என சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed