• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்

Nov 22, 2024

உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ஓர் முறையே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் பயனர்கள் தமக்கு அனுப்பப்பட்ட குரல் பதிவினை செவிமடுக்க முடியாத சூழ்நிலைகளில் இந்த வழிமுறையை பயன்படுத்தி தொடர்பாட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம் | Whatsapp Announces New Feature

இந்த புதிய அம்சம் பயனர்களின் தனி உரிமைக்கு முன்னுரிமை வழங்கி இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் வாரங்களில் உலகளாவிய ரீதியில் இந்த அம்சம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தற்பொழுது பரீட்சார்த்த அடிப்படையில் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed