• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

9 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம்: அறிவித்த சீனா

Nov 24, 2024

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டிற்கு என்ன காரணத்திற்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம். அதே சமயம் வெளிநாட்டினரை ஈர்க்க சில நாடுகள் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கி வருகிறது.

நமது அண்டை நாடான இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உள்பட 35 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இல்லாமல் பயணிக்கலாம் என அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், நமது மற்றொரு அண்டை நாடான சீனாவும் புதிதாக 9 நாடுகள் விசா இன்றி அந்நாட்டிற்குள் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது.

அதன்படி ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோசியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்

இப்படி பயணம் மேற்கொள்பவர்கள் 30 நாள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம். இதன்மூலம் சீனாவுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் வரும் 30-ம் தேதி முதல் அமுலுக்கு வரும் என கூறப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed