இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் மீது வீசிய ஈயோவின் புயல் சுவிட்சர்லாந்திற்கு வழக்கத்திற்கு மாறாக, வெப்பமான காற்றைக் கொண்டு வந்துள்ளது.
இதனால், சனிக்கிழமை ஜெனீவா மற்றும் டெல்ஸ்பெர்க்கில் 18.1 டிகிரி வெப்ப நிலை காணப்பட்டது.
நியானில் வெப்பம் 17.7 டிகிரியாக உயர்ந்தது.
சென். கலனில், காலநிலைப் பதிவுகள் தொடங்கியதிலிருந்து ஜனவரி மாதத்தில் இதுவே மிகவும் அதிகமான வெப்ப நிலை கொண்ட நாளாக இருந்தது. அங்கு வெப்பநிலை 16.2 டிகிரியாக உயர்ந்தது.
க்ளோட்டனில், 1864 முதல் அளவிடப்பட்ட வெப்பநிலைத் தரவுகளின்படி, இரண்டாவது வெப்பமான ஜனவரி நாளாக இது இருந்தது என்று MeteoSwiss, குறுஞ்செய்தி சேவை X இல் தெரிவித்துள்ளது.
Aadorf TG இல் ஜனவரி மாதத்தில் மூன்றாவது மிக உயர்ந்த வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது