• Sa.. März 15th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கேமேன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.5 ஆக பதிவு 

Feb. 9, 2025

கேமேன் தீவில் இன்று மாலை 4.53 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால், அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளது என அஞ்சப்படுகிறது. ஏனெனில், அதிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்படும்போது, பூமியின் மேற்பரப்புக்கு வருவதற்குள் ஆற்றலை அது இழந்து விடும்.

ஆனால், பூமியின் மேற்பரப்பு பகுதியில் ஏற்படும் நிலநடுக்கம் அதிக ஆற்றலுடன் நிலப்பகுதிகளை தாக்குவதற்கான சாத்தியம் உள்ளது. இதனால், கட்டிடங்களுக்கும் மக்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed