• Mi.. Okt. 7th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்.வடமராட்சியில் ஒரே தடவையில் மூன்று கன்றுகளை ஈன்ற பசு

Apr. 7, 2025

யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று  பதிவாகியுள்ளது.

வடமராட்சி – உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை நேற்று முன்தினம் ஈன்றுள்ளது. 

இரண்டு நாம்பன், ஒரு பசுக் கன்று ஈன்றுள்ள நிலையில் மூன்று கன்றுக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பசுவையும் கன்றுகளையும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.