• Di.. Okt. 6th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வீதியில் சென்ற மூதாட்டியை மோதிய டிப்பர். உயிரிழந்த மூதாட்டி

Apr. 12, 2025

 யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில்  82  வயது  மூதாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென பயணித்தபோது, வீதியின் கரையாக நடந்துசென்ற மூதாட்டியை மோதியதுடன் அவர் மீது ஏறியுள்ளது. இதையடுத்து அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

33 வயதுடைய டிப்பர் சாரதி கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.