• Sa.. Juni 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல் .செல்வி. தவராசா டிலக்சி (சிறுப்பிட்டி,13.05.2025)

Mai 13, 2025

யாழ் சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. தவராசா டிலக்சி அவர்கள் 13-05-2025ம் திகதி செவ்வாய்கிழமை இன்று அதிகாலை 1:00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் தவராசா, கேதீஸ்வரி தம்பதியரின் பாசமிகு மகளும்,

கேசவன், பிரவீன் (யாழ் புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி மாணவன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி (பலாலி), காலஞ்சென்றவர்களான சரவணமுத்து,  மகேஸ்வரி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுநாள் 15-05-2025ம் திகதி, வியாழக்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று காளையன்புலம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.