இந்தோனேசியாவின்(Indonesia) கிழக்கு மலுகு மாகாணத்தில் இன்று(15) காலை 5.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜகார்த்தா நேரப்படி காலை 07:50 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது..
நிலநடுக்கத்தின் மையம் மலுக்கு பாரத் தயா ரீஜென்சிக்கு தென்மேற்கே 189 கி.மீ தொலைவில் கடலுக்கு அடியில் 515 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் பெரிய அலைகளை உருவாக்க வாய்ப்பில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.