• Fr.. Aug. 14th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் கார் மோதி உயிரிழந்த மாடு 

Mai 17, 2025

யாழ்ப்பாணத்தில் கார் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளது.

காக்கைதீவு சந்தைக்கு அருகாமையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

யாழ் நோக்கி பயணித்த கார் வீதியில் நின்ற பசுமாட்டுடன் மோதிய நிலையில்,பசுமாடு சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில்.  கார் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.

மாட்டின் உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலையில் , மானிப்பாய் பிரதேச சபை மாட்டின் சடலத்தை வீதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.