ஆப்கானிஸ்தானில் (Afghanistan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நிலநடுக்கம் இன்று (07) அதிகாலை 1.05 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 126 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 36.50 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 67.82 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக அதிகாலை 12.56 மணியளவில் ரிக்டரில் 4.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
