• So.. Juli 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

Juni 13, 2025

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.

பல கனவுகளோடு பறந்த குடும்பத்தின் இறுதி நொடி.

இதனால் லண்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளின் வான் வழித்தடங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.

கட்டிய புது வீட்டிற்கு சடலமாக செல்லும் சோகம்! விமான விபத்தில் பலியான தாதி

விமான பயணம்

இதன் காரணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகளின் போது விமான பயணத்துக்கான நேரம் அதிகரிக்க கூடும். லண்டனில் இருந்து கொழும்பை வந்தடைந்த UL – 504 விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக மாற்றுப்பாதையில் தோஹாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதேவேளை, கொழும்பிலிருந்து பாரிஸ் நோக்கி புறப்பட்ட UL – 501 விமானம் மாற்றுப்பாதையில் பயணிக்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையின் 1979 , 94 11 777 1979 அல்லது 94 74 444 1979 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.