• Do.. Aug. 13th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆலயம் மக்கள் பயன்பாட்டுக்கு

Juni 16, 2025

யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த ஆலயத்திற்கு தினமும் சென்று வழிபாடு செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

அதில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் , இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.